ஸ்டாலினுக்கு உதய்யை நினைத்து கவலை… தமிழகத்தை நினைத்து அல்ல… பிரச்சாரத்தில் அமித்ஷா அதிரடி

ஸ்டாலினுக்கு உதய்யை நினைத்து கவலை… தமிழகத்தை நினைத்து அல்ல… பிரச்சாரத்தில் அமித்ஷா அதிரடி

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தனது மகன் உதயநிதியை பற்றி மட்டுமே கவலை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவிற்கு ஆதரவாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், பாஜக கூட்டணியில் அமைத்துள்ள அதிமுகவிற்கு ஆதரவாக பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் போன்ற பாஜக நிர்வாகிகள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தமிழகத்தில் பாஜக மற்றும் அந்த கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர், திமுக, காங்கிரஸ் கூட்டணி என்றாலே லஞ்சம், ரவுடியிசம், நில அபகரிப்பு, குடும்பத்தின் வளர்ச்சி இவை மட்டும் தான் என்பது நாம் இத்தனை ஆண்டு காலம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

Read more – தைரியம் இருந்தா திமுகவினர் மீது கையை வை பார்க்கலாம்… அண்ணாமலைக்கு சவால் விடுத்த கனிமொழி..

திமுக ஆட்சியமைக்கும் முன்னரே ஒரு முதல்வர் என்று பாராமல் தரக்குறைவாக பேசி வருகின்றனர். இந்தநிலையில் ஆட்சியமைத்தால் தமிழகத்தின் நிலைமையை நினைத்து பாருங்கள். சோனியாவிற்கு ராகுலை பற்றியும், ஸ்டாலினுக்கு உதயநிதியை பற்றியும் மட்டுமே கவலை, அவர்களுக்கு ஒருபோதும் மக்களை நினைத்து கவலையில்லை என்று தெரிவித்தார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *