சோனி ப்ளே ஸ்டேஷன்5 விற்பனை எப்போது?

சோனி ப்ளே ஸ்டேஷன்5 விற்பனை எப்போது?

இந்தியாவில் சோனி ப்ளே ஸ்டேஷன்5 குறித்தான விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

பயனர்கள் மத்தியில் மிகவும் எதிர்ப்பார்ப்புகளில் இருக்கும் சோனி நிறுவனத்தின் புதிய தலைமுறை கேமிங் கன்சோலான சோனி ப்ளே ஸ்டேஷன் 5 இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வரும் என்பது குறித்தான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மற்ற நாடுகளில் இந்த ப்ளே ஸ்டேஷனுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு விற்பனை படு ஜோராக இருந்திருக்கும் நிலையில் இந்தியாவில் இதன் விற்பனை எப்போது என்பது பயனாளர்களுக்கு தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வந்திருக்கிறது.

பயனாளர்களின் இந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அந்த வகையில் இதன் விற்பனை முதல் கட்டமாக அடுத்த ஆண்டு ஜனவரியில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களில் முதலில் விற்பனைக்கு வரும் எனவும், இதற்கான முன்பதிவு இந்த மாதம் இறுதியில் துவங்கும் எனவும் சொல்லப்படுகிறது.

READ MORE- சாம்சங்கின் கேலக்ஸி நோட் சீரிஸ் எப்போது அறிமுகம்?

மற்ற நாடுகளை போலவே இந்தியாவிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே ப்ளே ஸ்டேஷன் 5 வரும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *