டப்ஸ்மாஷ் செயலியை ரெடிட் நிறுவனம் விலைக்கு வாங்கி இருக்கிறது.
இந்த மில்லினியல் தலைமுறை இடையே பிரபலமான செயலியனான டப்ஸ்மாஷை ஆன்லைன் தளமான ரெடிட் விலைக்கு வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெடிட் நிறுவனம் டப்ஸ்மாஷ் குழுவுடன் இணைந்து இதன் அனுபவத்தை பயனாளர்களுக்கு மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளது. ரெடிட் டப்ஸ்மாஷை விலைக்கு வாங்கியிருந்தாலும் டப்ஸ்மாஷ்ஷின் பிராண்டிங்கில் எந்த மாற்றமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
READ MORE- அசத்தல் வசதிகளுடன் ஆப்பிளின் புதிய ஐபேட்!
மேலும் இதன் ஒப்பந்தத்தின்படி, டப்ஸ்மாஷ் நிறுவனர்கள் அனைவரும் ரெடிட்டுடன் இணைகிறார்கள். டப்ஸ்மாஷ்ஷ்ன் வித்தியாசமான வீடியோ டூடுல்கள் ரெடிட்டுடன் இணையும் எனவும் இதன் மூலம் பயனாளர்களுக்கு மேம்பட்ட அனுபவம் கிடைக்கும் எனவும் ரெடிட் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ரெடிட் நிறுவனம் டப்ஸ்மாஷ்ஷை வாங்கிய விலை குறித்தான விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.