அரசியலுக்கு தாமதமாக வந்துவிட்டேன், என்னை மன்னித்து விடுங்கள் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை :
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏப்ரல் 6 ம் தேதி வாக்குப்பதிவு என்பதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், மதுரவாயல் தொகுதி மற்றும் பூந்தமல்லி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர், உயிரே, உறவே, தமிழே… வணக்கம் இப்பொழுது உங்கள் முன்பு வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளவர்கள் வயதில் மிக சிறியவர்கள், நிறைய படித்தவர்கள். உங்களுக்காக ஓடி ஓடி உழைக்க கடைசி வர கடினமாக உழைப்பார்கள். மக்கள் நீதி மய்யம் என்னை விட இளையது என்று தெரிவித்தார்.
Read more – தமிழகம் அடகில் உள்ளது, மீட்க ஸ்டாலினை அரியணையில் ஏற்றுங்கள் : தூத்துக்குடி எம்.பி. கனிமொழி
மேலும், எங்கள் வேட்பாளர்கள் யார் மீதும் குற்ற வழக்கு இல்லை, கட்ட பஞ்சாயத்து பிரச்சினையும் இல்லை. எங்களை நம்பி வெற்றி பெற செய்யுங்கள். நிச்சயம் மக்களாட்சி தருவோம். காமராஜர் மக்களில் ஒருவர். அதனால்தான் மக்கள் ஆட்சி என்கிறோம். அரசியலுக்கு தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.