அதிமுக ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் தமிழகம் பாழாய் போய்விட்டது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவை :
வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி தேர்தல் என்பதால் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஒவ்வொரு கட்சிகளும் பிற கட்சிகளை குறை கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர். தேர்தலுக்கான வியூகங்களை அரசியல் கட்சிகள் மிகவும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், கோவை கிணத்துக்கடவு பகுதியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டபோது கூறியதாவது; அதிமுக கட்சியுடன் கூட்டணி வைத்து தமிழகத்தில் பா.ஜ.க எப்படியாவது வந்து விட வேண்டுமென்று திட்டம் தீட்டிவருகிறது. அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க கூடாது. அதிமுக – பாஜக கூட்டணிக்கு தமிழக மக்கள் இந்த தேர்தலில் தக்க பாடத்தை புகுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
Read more – இன்றைய ராசிபலன் 20.03.2021!!!
மேலும், இதேபோல் திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அதிமுக ஆட்சியில் தமிழகம் கடன் என்னும் பெரும் சுமையில் தத்தளிக்கிறது. அதிமுக ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் தமிழகம் பாழாய்போய்விட்டது. கடந்த 2014 ல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வரும் என்று கூறப்பட்டது. இன்றோ 2021 ஆகியும் இன்னும் 1 செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.