தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்டு திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு :
தமிழகம் தவிர கர்நாடகா, ஆந்திரா பிரதேசம், பாண்டிசேரிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டனர். தமிழகத்தில் பள்ளி திறப்பது எப்போது என்று தொடர்ந்து கேள்விகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் ஈரோடு, கோபி செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையிடம் கலந்து ஆலோசித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் பள்ளி திறப்பது குறித்து முடிவு எடுப்பார். அவ்வாறு அவர் அறிவித்தவுடன், பள்ளிகளை திறக்க தயார் நிலையில் தான் இருக்கிறோம் என்றார். மேலும், பள்ளிகள் திறப்பது மற்றும் பாடத்திட்டங்கள் முறையே பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் இன்று முதல் இந்த வாரம் இறுதி வரை கருத்து கேட்கப்படும் என்று தெரிவித்தார்.
Read more – சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் சஞ்ஜீப் பானர்ஜி..
அதனைத்தொடர்ந்து, பள்ளிகள் திறப்பதற்கு முன்பாகவே மாணவர்களுக்கு புத்தகங்கள். பள்ளி சீருடை மற்றும் சைக்கிள் போன்றவை வழங்கப்பட்டு விட்டது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாணவர்கள் இடைவெளி விட்டு அமரும் வகையில் வகுப்பறைகள் சரி செய்யப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.பள்ளிகள் திறந்தவுடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.




