தமிழகம் முழுவதும் ரூ.2500 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு : ரேஷன் கடைகளில் இன்று முதல் விநியோகம்

தமிழகம் முழுவதும் ரூ.2500 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு : ரேஷன் கடைகளில் இன்று முதல் விநியோகம்

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.2,500, பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட இருக்கிறது.

சென்னை :

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி, ஏலக்காய் மற்றும் கரும்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்திற்காக அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் டோக்கன் வழங்கி துவங்கி வைத்தனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரேஷன் கடைகளில் அதிக கூட்டம் கூடாமல் இருப்பதற்காக ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு டோக்கன் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் ரூ. 2,500 பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் இன்று (திங்கள் கிழமை) தொடங்குகிறது.

Read more – இன்றைய ராசிபலன் 04.01.2021!!!

காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை என்ற இரு முறை கணக்கில் வழங்கப்படும்.பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளிகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *