நடிகர் ரஜினிகாந்த் தனது புதிய கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் எப்பொழுது அரசியல் பயணத்தை தொடங்குவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் வரும் டிசம்பர் 31ம் தேதி கட்சியின் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்து இருந்தார்.ஏற்கனவே புதிய கட்சிக்கு அர்ஜூன மூர்த்திக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும்,காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனுக்கு ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர் பதவியும் வழங்கப்பட்டு இருந்தது.
Read more – இன்றைய ராசிபலன் 15.12.2020!!!
இந்தநிலையில், நடிகர் ரஜினிகாந்த் மக்கள் சேவை கட்சி என்ற புதிய கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.மக்கள் சேவை கட்சி தலைவரின் முகவரி தேர்தல்ஆணைய பதிவேட்டில் ஏர்ணாவூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் சேவை கட்சிக்கு பாபா முத்திரை சின்னத்தை கேட்டதாகவும்,அதற்கு தேர்தல் ஆணையம் மறுத்து ஆட்டோ வழங்கியதாகவும் தெரியவந்துள்ளது.




