மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..
இன்று செவ்வாய் கிழமை தேதி 15.12.2020,நல்ல நேரம் :காலை 7:45- 8. 45,மாலை 4.45-5.45
ராகுகாலம் மாலை 3.00-4. 30,எமகண்டம் காலை 9.00- 10. 30 , இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம்:
கணவன்-மனைவி இடையே உண்டான உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும்.தொழில் ரீதியான போட்டிகள் கடுமையாக காணப்படும்.உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது.எடுத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
ரிஷபம்:
குடும்ப உறவினர்களிடம் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.தொழில் மற்றும் வேலை பார்க்கும் நிறுவனத்தில் உங்களுக்கு மரியாதை கூடும்.குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்து காரியத்தை தொடங்கினால் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்:
நிதி மற்றும் கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும்.கணவன் மனைவியிடையே சிறு மனக்கசப்பு ஏற்படும்.பிள்ளைகள் செய்த காரியத்தால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.வேலை பார்க்கும் நிறுவனத்தில் சக ஊழியர்களை சிரித்து கடப்பது நல்லது.
கடகம்:
குடும்ப உறுப்பினர்களின் வருகையால் அதிகப்படியான செலவுகள் ஏற்படும்.வெளியூர் பயணங்களை முடிந்தவரை தவிர்த்தல் நல்லது.வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.பொருளாதார நிலை மந்தமாக இருந்தாலும் மனதளவில் நிம்மதியாக காணப்படுவீர்கள்.
சிம்மம்:
ஆரோக்கிய விஷயத்தில் கவனம் என்பது குறைவாகவே இருக்கும். நிலம் மனை வீடு போன்ற விஷயங்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.தொடர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.குடும்ப உறுப்பினர்களுடன் அன்பை பாராட்டுவீர்கள்.
கன்னி:
எதிர்பாராத புதிய உறவுகளின் ஆதரவால் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருத்தல் வேண்டும்.சக பணியாளரின் ஒத்துழைப்பால் அந்த நாள் சிறப்பாகக் காணப்படும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்து அதிக அளவு லாபம் கிட்டும்.
துலாம்:
பெற்றோரின் ஆலோசனை பெற்று செயல் படுவது நல்லது.சுபகாரியங்கள் வந்து தானாக கைகூடும்.பண புழக்கத்தில் நண்பர்களிடையே சிறு வாக்குவாதம் ஏற்படும்.வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம்.
விருச்சிகம்:
கணவன் மனைவியிடையே விட்டுக்கொடுத்து செலுத்தல் நன்மை அளிக்கும்.இன்று ஆரோக்கியமாகவும்,உற்சாகமாகவும் காணப்படுவீர்கள்.உங்கள் பணிகள் மற்றும் காரியங்களில் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது.
தனுசு:
பெற்றோரின் ஆலோசனையை பெற்று காரியங்களை மேற்கொள்வது நல்லது.தொழிலில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் நீங்கி ஒத்துழைப்பு கிடைக்கும்.ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மனநிம்மதி அடைவீர்கள்.
மகரம்:
எடுத்த காரியங்களில் அச்சமின்றி செயல்படுவது வெற்றி அளிக்கும்.எதிர்பாராமல் சிலருக்கு உதவுவீர்கள்.மற்றவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.வியாபார விசயத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
கும்பம்:
தொடர் தோல்விகளில் இருந்து வெற்றி மார்க்கம் நோக்கி முன்னேற்றம் ஏற்படும்.குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் நல்ல லாபம் பெறலாம்.
மீனம்:
தொழில் மற்றும் வேலை உங்களுடைய நேரடி பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது.மனதில் இருக்கும் தேவையில்லாத கவலைகளை மறந்து கடந்து செல்வது நல்லது.குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றிபெறும்.