கல்லூரிகள் திறப்பு எப்போது?அமைச்சர் கே.பி.அன்பழகன் புதிய தகவல்

கல்லூரிகள் திறப்பு எப்போது?அமைச்சர் கே.பி.அன்பழகன் புதிய தகவல்
கல்லூரிகள் திறப்பது எப்போது என்பது குறித்து வரும் 12ம் தேதி முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் வருகிற 16-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாமா? என்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம் கருத்துக்கேட்கப்படும் என்றும், அதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் 9-ம்தேதி (இன்று) நடைபெறும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள 9, 10, 11, 12-ம் வகுப்புகள் உள்ள பள்ளிகளில் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
சென்னையில் உள்ள பள்ளிகளிள் இந்த கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில் நவம்பர் 16ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா? இல்லையா என்பது பற்றி 12ம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *