Friday, September 25, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

பிரதமர், முதல்வரைக் கண்டித்து திமுக கூட்டணி தலைவர்கள் உண்ணாவிரதம்!

saravanan by saravanan
December 14, 2020 2:12 PM GMT+5:30

விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணா விரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள் விவசாயிகள். இதற்கு நாளுக்கு நாள் நாடு முழுவதும் ஆதரவு கூடிக்கொண்டே செல்கிறது. இந்த போராட்டமானது தமிழகத்திலும் தற்போது பரவத் துவங்கியுள்ளது.

விவசாயிகளை குழந்தை போல பாதுகாத்து வருகிறோம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

போராடும் விவசாயிகள் தரகர்களா? முதல்வருக்கு ஸ்டாலின் எதிர்ப்பு!

வேளாண் சட்டம் பற்றி விவாதிக்கலாம் வாங்க…முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் சவால்!


ஏற்கனவே திமுக கூட்டணிக் கட்சிகள் தனித்தனியாக போராட்டங்கள் நடத்தி வருகின்றன. நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்திருந்தன. இன்னும் போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள விவசாயிகள், நாட்டு மக்கள் அனைவரையும் உண்ணா விரதப் போராட்டத்திற்கும் அழைத்துள்ளனர்.
இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 18ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்கிறார்கள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள்.


கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், இந்திய நாடாளுமன்றத்தில் வழக்கமாகப் பின்பற்றப்பட வேண்டிய ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராக, மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றி, நாட்டில் உள்ள கோடானு கோடி விவசாயிகள் அனைவரையும், ஒரு சில கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்கத் துடிக்கும் மத்திய பாஜக அரசு, இந்தச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, கடந்த 19 நாட்களாக, அறவழியில் அமைதியாகப் போராடி வரும் பல லட்சக்கணக்கான விவசாயிகளின் மனங்களில் கொழுந்துவிட்டெரியும் உணர்வுகளைக் கொஞ்சமும் மதிக்காமல் கொச்சைப்படுத்தி வருகிறது என்று சுட்டிக்காட்டினர்.


போராடும் விவசாயிகளை மாவோயிஸ்டுகள் என அமைச்சர் பியூஸ் கோயல் சொன்னதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, விவசாயிகளின் மகத்தான போராட்டத்தைச் சரியாக மதிப்பிடாமல் அவமதித்துவரும் மத்திய பாஜக அரசின் தவறான அணுகுமுறை குறித்து எந்தக் கருத்தையும் கூறாமல் மத்திய அமைச்சர்களின் பிற்போக்குத் தனமான கருத்தையும் கண்டிக்காமல் – இருக்கும் முதல்வர் பழனிசாமியின் சுயநலப் போக்கு மிகுந்த கவலைக்குரியது மட்டுமின்றி கண்டனத்திற்கும் உரியது எனவும் சாடினர்.

read more:சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன்…கமல்ஹாசன் அறிவிப்பு!


போராட்டங்களை நடத்தி வந்தாலும், இதுவரை மத்திய பாஜக அரசு குறைந்தபட்ச ஆதார விலையே இல்லாத சட்டங்களையும், இலவச மின்சாரத்தை ரத்து செய்ய கொண்டு வரப்படும் மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற முன்வரவில்லை என்றதோடு,


ஆணவத்துடன் விவசாயிகள் போராட்டத்தைக் கையாளும் மத்திய பாஜக அரசினையும் – அதை ஒரு வார்த்தை கூட தட்டிக் கேட்கத் தைரியமின்றி அடங்கி ஒடுங்கி இருக்கும் முதல்வர் பழனிசாமியையும் கண்டித்து, டெல்லியில் கரோனா காலத்திலும் உயிரைத் தியாக வேள்வியாக முன்னிறுத்தி, அறவழியில் போராடி வரும் விவசாயிகளுக்கும் – அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு அளித்தும் வரும் 18ஆம் தேதி சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அறவழியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்களும் – நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களும் பங்கேற்கும் ஒரு நாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.


ஜனநாயக நெறிகளைப் பின்பற்றி, அறவழியில் விவசாயப் பெருமக்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்போம். அவர்களின் கோரிக்கைகள் வெற்றி பெற எந்நாளும் துணை நிற்போம் என திமுக கூட்டணி தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

உணவு கொடுத்து உதவுபவர்களை தீவிரவாதிகள் என்று கூறுவது நமது கலாச்சாரமா ? மத்திய அரசுக்கு மகாராஷ்டிர முதல்வர் கேள்வி

Next Post

முதல்வரை தேவையின்றி விமர்சிக்காதீங்க…ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அட்வைஸ்!

Next Post

முதல்வரை தேவையின்றி விமர்சிக்காதீங்க...ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அட்வைஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கபடியில் பதக்கம் உறுதி செய்த இந்தியா!

September 23, 2026 4:46 PM GMT+5:30

இந்தியாவை நோக்கும் உலக முதலீடு; 100 நாட்களில் 164 பதிவுகள்!

September 23, 2026 3:02 PM GMT+5:30

லஞ்சமும் டிஜிட்டல் மயம்?

September 23, 2026 12:52 PM GMT+5:30

மீண்டும் வேகம் எடுக்கும் சேவைத்துறை!

September 23, 2026 11:08 AM GMT+5:30

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

September 22, 2026 11:26 PM GMT+5:30

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

September 22, 2026 11:13 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version