முதலமைச்சர் தாயாருக்கு அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சருக்கு கொரோனா தொற்று…

முதலமைச்சர் தாயாருக்கு அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சருக்கு கொரோனா தொற்று…
மறைந்த முதலமைச்சரின் தாயார் தவுசாயியம்மாளுக்கு அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Minister Duraikannu

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயியம்மாள் கடந்த 13-ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த வேளாண் துறை அமைச்சா் துரைக்கண்ணு சென்னையிலிருந்து சேலத்துக்குப் புறப்பட்ட நிலையில், திண்டிவனம் அருகே காரில் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவா் உடனடியாக விழுப்புரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு, உயா் சிகிச்சைக்காக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து வரப்பட்டார்.

அங்கு துரைக்கண்ணுவுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அமைச்சருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அமைச்சருக்கு மருத்துவா்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனா். மேலும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *