இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் தடுப்பூசி, உருமாற்றம் அடைந்த வைரசை தடுக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
டெல்லி :
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதால் உலக மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். அதற்குள் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் உருமாறி புதுவகை கொரோனா வைரஸாக உருவெடுத்துள்ளது. இது ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கால் எடுத்து வைத்துள்ளது.
இது மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சப்படுகிறார்கள். ஏற்கனவே, கண்டுபிடித்த கொரோனா வைரஸ் தடுப்பூசி இந்த வைரசுக்கும் எதிராக வேலை செய்யும் எனக் கூறப்படுகிறது. இருந்தாலும் மக்களிடம் ஒருவகை அச்சம் நிலவுகிறது.
Read more – புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரம்: குற்றவாளிக்கு மரண தண்டனை
இந்த நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் தடுப்பூசி, உருமாற்றம் அடைந்த வைரசுக்கு எதிராக நிச்சயம் வேலை செய்யும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனவே அது குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஆந்திரா, குஜராத், பஞ்சாப், அசாம் மாநிங்களில் கொரோனா தடுப்பூசி திட்ட ஒத்திகை வெற்றி பெற்றுள்ளது. கொரோனா தடுப்பூசி குறித்து விரைவில் நல்ல செய்தி வெளியாகும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது