ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் :டி.ஆர்.எஸ் முன்னிலை

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் :டி.ஆர்.எஸ்  முன்னிலை
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் அதிக வார்டுகளை கைப்பற்றி டி.ஆர்.எஸ் முன்னிலை வகித்து வருகிறது.

ஹைதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் 150 வார்டுகளை கொண்ட மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த டிசம்பர் 1ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க, அசாதுதீன் ஓவைசியின் அனைத்திந்திய மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன்,தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி(டிஆர்எஸ்) உள்ளிட்ட கட்சிகளுக்கிடையே கடும் போட்டிகள் நிலவியது.

இந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மொத்தம் 30 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை தொடங்கி வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.எண்ணிக்கையின் போது தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கும், பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.அதில் 1.30 மணி நிலவரப்படி டி.ஆர்.எஸ் 57 வார்டுகளில் வெற்றி பெற்று முன்னிலை வகித்து வருகிறது.அடுத்த படியாக பாஜக 22 வார்டுகளிலும், ஏஐஎம்ஐஎம் கட்சி 31 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

டி.ஆர்.எஸ் வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலையில் இருப்பதால் அக்கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *