மத்திய அரசின் புதிய ஆய்வு.. மருத்துவ சிகிச்சைக்காக கட்டணம் வசூலிப்பதில் தமிழகத்திற்கு முதலிடமா?

மத்திய அரசின் புதிய ஆய்வு.. மருத்துவ சிகிச்சைக்காக கட்டணம் வசூலிப்பதில் தமிழகத்திற்கு முதலிடமா?

மிகக்குறைந்த அளவு மருத்துவக் கட்டணம் வசூலிப்பதில், நாட்டிலேயே தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தொடர்பான ஆய்வு முடிவுகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், அனைத்து மாநிலங்களிலும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டண விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

மத்திய அரசின் ஆய்வின்படி, நாட்டிலேயே தமிழகத்தில்தான் மிகக்குறைந்த அளவு மருத்துவக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சாதாரண சிகிச்சைக்கு சராசரியாக ரூ.433 முதல் ரூ.520 வரை செலவாகிறது எனவும், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற ரூ.28,412 முதல் ரூ.41,566 வரை செலவாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் 56% பேர் அரசு மருத்துவமனைகளிலும், 41% பேர் தனியார் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் 42% பேர் அரசு மருத்துவமனைகளிலும், 54% பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகிறார்கள் என்றும் அந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் அதிக படுக்கை வசதி கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2வது இடத்தில் இருப்பதாக மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *