மேற்குவங்கம் மற்றும் அசாமில் முதற்கட்ட வாக்குபதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும், அசாமில் 47 சட்டமன்ற தொகுதிகளுக்கும் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்தமுறை 37 சதவீத வாக்குச்சாவடிகள் அதிகமாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு வங்கத்தில் சுமார் 10, 288 வாக்குப்பதிவு மையங்கள் உள்ள நிலையில் ஒவ்வொரு மையங்களிலும் ஆயிரம் பேர் மட்டுமே வாக்களிக்க அம்மாநில தேர்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது. அதேபோல், அசாமில் 11,537 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Read more – இன்றைய ராசிபலன் 27.03.2021!!!
அசாம் சட்டமன்ற தேர்தலை பொருத்தமட்டில் குடியுரிமை சட்டம், தோட்ட தொழிலாளர்கள் பிரச்சினை நடைமுறையில் உள்ளது. தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் நக்சல் தொல்லை இருப்பதால் துணை பாதுகாப்பு படையினர் மக்களின் பாதுகாப்பிற்காக கூடுதலாக நிறுத்தப்பட்டுள்ளனர்.