ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி எடுத்து வரும் நபருக்கு டிரைவிங் டெஸ்ட் இல்லாமல் லைசன்ஸ் வழங்கப்படும் என்ற புதிய சட்டம் அமுலுக்கு வருகிறது.
புதுடெல்லி :
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை சார்பில் நாடுமுழுவதும் தொடர்ந்து பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு இருக்க வேண்டிய வசதிகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைக் கொண்டு வர மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் புதிய திட்டத்தை வகுத்துள்ளது.
மக்களுக்கு தரமான ஓட்டுநர் பயிற்சி அளிப்பதற்காகவும், மையங்களில் பயிற்சி முடித்த ஓட்டுநர்கள், ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பித்த பிறகும் ஓட்டுநர் பரிசோதனையை (Driving test) செய்து காமிக்க வேண்டாம் என்று விலக்கு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
Read more – தூக்கக்கலக்கத்தில் ஏர்பட்ஸ் ஹெட்போனை முழுங்கிய நபர் : திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் பரபரப்பு
இதற்காக பொதுமக்களிடம் கருத்துகள் பெறப்பட்டு சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று
மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.