ஒரே மேடையில் 2 பெண்களை மணந்த காதல் மன்னன் : இணையத்தில் பொங்கும் 90’s கிட்ஸ்கள்

ஒரே மேடையில் 2 பெண்களை மணந்த காதல் மன்னன் : இணையத்தில் பொங்கும் 90’s கிட்ஸ்கள்

சத்தீஸ்கரை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் தான் காதலித்த 2 பெண்களை ஒரே மேடையில் திருமணம் செய்தது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

சத்தீஸ்கர் :

சத்தீஸ்கர் மாநிலம் பாஸ்தர் மாவட்டத்தில் உள்ள திகாரா லோங்கா கிராமத்தை சேர்ந்தவர் சாந்து மவுரியா (24). இவர் கடந்த 3 ம் தேதி ஒரே மேடையில் ஹசினா, சுந்தரி என்ற 2 பெண்களை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமானது உறவினர்கள் மற்றும் ஊரார் மத்தியில் 2 காதலிகள் சம்மதத்துடன் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்டார். இதில் குறிப்பிட்டதக்க விஷயம் என்னவென்றால் மணப்பெண்களான சுந்தரி வயசு 21, ஹசினா வயது 19 என்ற குழந்தை திருமணம் என்ற முறையில் அரங்கேறியுள்ளது.மேலும், இவர்கள் இரண்டு பேரும் பிளஸ் 2 வரை மட்டுமே படித்துள்ளனர்.

Read more – இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

இதுகுறித்து மணமகன் சாந்து மவுரியா அளித்த பேட்டியில், தான் காதலித்த இரண்டு பெண்களையும் ஏமாற்ற மனமில்லை என்றும், அதனால் இருவர் சம்மதத்துடன் அவர்களை கரம் பிடித்தேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த திருமணம் குறித்து இணையத்தில் 90’s கிட்ஸ்கள் பொறாமையுடனும், கண்ணீருடனும் பல மீம்ஸ் மட்டும் வீடியோக்களை வெளியிட்டு தங்கள் கோவத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *