சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் ட்ரைய்லர் நேற்று வெளியிடப்பட்டது.

பொங்கல் அன்று நடிகர் சிம்புவின் கம்பேக் படமான ‘ஈஸ்வரன்’ வெளியாக உள்ளது. படத்தின் மியூசிக் ஆல்பம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில் நேற்று படத்தின் ட்ரைய்லர் வெளியாகி உள்ளது.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால், பாரதிராஜா, நந்திதா உள்ளிட்ட பலரும் நடித்திருக்க படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், ட்ரைய்லரின் இறுதியில், ‘நீ அழிக்கறதுக்கு வந்த அசுரன்னா, நான் காக்கறதுக்கு வந்த ஈஸ்வரன்டா’ என சொல்வதோடு ட்ரைய்லர் முடிகிறது.
READ MORE- தனுஷ், மாளவிகாவின் ‘டி43’ டைட்டில் என்ன?
இதில் சிம்பு, தனுஷின் ‘அசுரன்’ படத்தை குறிவைத்தும் தனுஷை முன்னிறுத்தியும் வசனம் பேசியுள்ளதாக சமூக வலைதளங்களில் பேச்சு எழுந்துள்ளது.
தனுஷூக்கும் சிம்புவுக்கும் இடையில் பிரச்சனை என்றும் பின்பு அதெல்லாம் இல்லை எனவும் சொல்லப்பட்ட நிலையில் தற்போது படத்தில் இந்த மாதிரி தாக்குதல் வசனங்கள் இடம் பெறுவது குறித்து ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.




