இன்றைய ராசிபலன்….
இன்று திங்கள்க்கிழமை, தேதி 14.09.2020, ராகுகாலம் காலை 7.30-9.00, எமகண்டம் காலை 10.30-12.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம்
வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வதன் மூலம் உங்கள் மனதில் சிறந்த மாற்றத்தை உணரலாம். உணர்ச்சிவசப்படுவதை விட யதார்த்தமாக யோசிக்க வேண்டியது அவசியம். அமைதியான மனநிலையில் இருப்பது அவசியமாகும்.
ரிஷபம்
நீங்கள் உறுதியுடன் பல நற்பலன்களைக் காணலாம். வெற்றி பெறுவோம் என்று உறுதி கொள்ளுங்கள். இறுதியில் வெற்றி உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும்.
மிதுனம்
இன்று காணப்படும் சிறிய பிரச்சினைகளை சிறப்பாக கையாள்வீர்கள். உங்களின் கடின முயற்சி மூலம் இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக்கி கொள்ள முயலுங்கள்
கடகம்
இன்று உற்சாகமான நாளாக அமையும். இன்று வெற்றிக்கு உகந்த நாளாகும். உங்கள் குடும்பத்தில் நடக்கும் விசேஷம் உங்களுக்கு புதிய உற்சாகத்தை அளிக்கும். புதிய நண்பர்களின் தொடர்பு கிடைக்கலாம்.
சிம்மம்
இன்று மன சிறு உளைச்சலுக்கு ஆளாகலாம். பாதுகாப்பற்ற உணர்வு அல்லது பதட்டத்தை தவிர்ப்பது நல்லது. உங்கள் இலக்குகளை அடைவது இன்று கடினமாக இருக்கலாம்.
கன்னி
உங்களின் ஆற்றலை நீங்கள் உணரும் நாள். இலக்குகளை நிர்ணயித்து அதை அடைவதற்கு முயற்சி செய்தால் வெற்றி காணலாம். உங்கள் பணிகளை முன்னுரிமைப்படுத்தி அதன்படி வேலை செய்யுங்கள்.
துலாம்
இன்று உங்களுக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த வாய்ப்பை நீங்கள் நன்கு பயன்படுத்துவீர்கள். இன்றைய தினத்தின் வாய்ப்புகளை சிறந்த வகையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
விருச்சிகம்
இன்றைய நாளை சிறப்பானதாக ஆக்க நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.தியானம் அல்லது யோகா போன்றவைகளில் ஈடுபடுவதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.
தனுசு
இன்றைய நாள் சற்று சோர்வாக காணப்படும். இன்று மனதில் ஏற்படும் சலனங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். அமைதியாக இருக்க வேண்டியது அவசியம்.
மகரம்
உங்களின் தகவல் பரிமாற்றத் திறமையால் இன்று வெற்றி காண்பீர்கள். இறை மந்திரங்களை ஜபிப்பதன் மூலமும் ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்பதன் மூலமும் திறமையை வளர்த்துக் கொள்ளலாம். இதனால் நல்ல வளர்ச்சிகளை பெறுவீர்கள்.
கும்பம்
எதிர் காலம் பற்றிய எண்ணங்களும் கனவுகளும் உங்கள் மனதில் அதிகமாக காணப்படும். இது அனைவரிடத்திலும் காணப்படும் பொதுவான விருப்பம். இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு சிறந்த நாளாகும்.
மீனம்
உங்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியமாகும். இன்று அதிக பொறுப்புகள் காணப்படும். நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி தாமதமாகும். பாடல்கள் கேட்பதன் மூலம் மன நிம்மதி பெறலாம்.