மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..
இன்று வெள்ளி கிழமை தேதி 19.02.2021, நல்ல நேரம் :காலை 9.30-10.30, மாலை 1.30-2.30, ராகுகாலம் காலை 10.30-12.00, எமகண்டம் காலை 3.00-4.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம் :
உங்களால் உங்கள் குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்படலாம். கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம் :
குடும்பத்தில் ஏற்பட்ட கவலைகள் மறந்து மகிழ்ச்சி நிலவும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சியில் அனுகூலப்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உறவினர்கள் வழியே சுபகாரியங்கள் வந்தடையும்.
மிதுனம் :
நீங்கள் எடுத்த காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். தொழில் ரீதியான பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டு சோர்வு உண்டாகும்.
கடகம் :
உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் இல்லத்தில் அரங்கேறும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்துடன் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது நன்மை அளிக்கும். நண்பர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும்.
சிம்மம் :
குடும்பத்தில் பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
கன்னி :
குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகலாம். உங்கள் ராசிக்கு காலை 09.40 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. மதியத்திற்கு பிறகு அனுகூலங்கள் ஏற்படும்.
துலாம் :
உங்கள் ராசிக்கு காலை 09.40 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் காரியங்களில் தாமதங்கள் உண்டாகும். வேலையில் மேலதிகாரிகளிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சுப முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம் :
குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக காணப்படுவதால் சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். .
தனுசு :
குடும்ப பொருளாதாரத்தில் உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் உங்கள் மனைவி ஆர்வமாக இருப்பார்கள்.
Read more – தன்னைப்போல் இல்லை எனக்கூறி குழந்தையை கொன்ற கொடூரன்
மகரம் :
உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. நண்பர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும்.
கும்பம் :
நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபட்டு செயல் படுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும்.
மீனம் :
குடும்பத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும்.