மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..
இன்று புதன் கிழமை தேதி 16.12.2020,நல்ல நேரம் :காலை 10.45-11.45,மாலை 4.45-5.45,
ராகுகாலம் மாலை 12.00- 1.30,எமகண்டம் காலை 7.30-9.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம்:
நீங்கள் மனதில் நினைத்த சில காரியங்கள் நல்லதாய் நடக்கும் .குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் பலன் அளிக்கும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
ரிஷபம்:
கணவன் மனைவியிடையே சிறு மனக்கசப்பு ஏற்படும்.பொருளாதார நிலை மந்தமாக இருந்தாலும் மனதளவில் நிம்மதியாக காணப்படுவீர்கள்.ஆரோக்கிய விஷயத்தில் கவனம் என்பது குறைவாகவே இருக்கும்.
மிதுனம் :
பெற்றோர் ஆலோசனைகளை கேட்டு செயல்படுவது நல்லது.தொழில் விஷயத்தில் பிறரை நம்பாமல் நீங்களே முன்னெடுத்து இயங்கினால் நல்லது.சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் எளிதில் காரியங்கள் நிறைவேறும்.
கடகம்:
நெருங்கியவர்களிடம் பேசும்போது கவனமாய் பேசுதல் நல்லது.தொழில் ரீதியாக அலைச்சல் ஏற்பட்டு அதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது.தொழில் ரீதியான ஆரோக்கியமான போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.
சிம்மம்:
பொழுதுபோக்கு விஷயங்கள் சிறிது ஈடுபடும் பொழுது வீண் செலவுகளால் உண்டாகும்.குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படும்.பணிபுரியும் இடங்களில் மேலதிகாரிகளிடம் பாராட்டை பெறுவீர்கள்.
கன்னி:
உடன்பிறப்புகளால் மகிழ்ச்சிகள் உண்டாகும்.பயணத்தின் போது கவனமாய் இருந்தால் நல்லது.தொழில் மற்றும் வேலை பார்க்கும் நிறுவனத்தில் உங்களுக்கு மரியாதை கூடும்.கணவன் மனைவி இடையே உண்டான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
துலாம்:
நிறைய நாட்கள் தள்ளிப்போன காரியங்கள் இன்று நிறைவேறும்.வாகன மற்றும் நிலம் வாங்குவதற்கான யோகம் உண்டு.தொழில் ரீதியான போட்டிகள் கடுமையாக காணப்படும்.நிதி மற்றும் கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும்.
விருச்சிகம்:
கணவன்-மனைவி இடையே உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும்.எதிர்காலத் திட்டங்களை திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நாளாக அமையும்.குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்து காரியத்தை தொடங்கினால் சிறப்பாக இருக்கும்.
தனுசு :
அலுவலகத்தில் மற்றும் தொழில் ரீதியாக சிறு தடைகள் ஏற்படும்.குடும்ப உறுப்பினர்களுடன் அன்பை பாராட்டுவீர்கள்.நிலம் மனை வீடு போன்ற விஷயங்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. ஒரு சில விஷயத்தில் தீர யோசனைக்கு பிறகு இயங்குவது நல்லது.
மகரம்:
பண புழக்கத்தில் நண்பர்களிடையே சிறு வாக்குவாதம் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல பெற வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நன்மை அளிக்கும்.இன்று ஆரோக்கியமாகவும்,உற்சாகமாகவும் காணப்படுவீர்கள்.
கும்பம்:
ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மனநிம்மதி அடைவீர்கள்.சிந்தனைத் திறனை மேம்படுத்துவதற்காக புதிய உக்திகளை கையாளுவீர்கள்.உங்கள் பணிகள் மற்றும் காரியங்களில் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது.
மீனம்;
இன்று வேலை மற்றும் தொழிலில் ரீதியாக பயணம் மேற்கொள்வீர்கள்.மற்றவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு சங்கடங்களை சந்திக்கலாம்.