மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..
இன்று திங்கள் கிழமை தேதி 15.03.2021, நல்ல நேரம் :காலை 6.30-7.30, மாலை 5.00- 6.00, ராகுகாலம் காலை 7.30-9.00, எமகண்டம் காலை 10.30-12.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம் :
பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் மன சங்கடங்கள் ஏற்படலாம். உறவினர்களிடம் ஏற்படும் வாக்குவாதங்கள் மன உளைச்சலை உண்டாக்கும். தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள்.
ரிஷபம் :
குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்தடையும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
மிதுனம் :
குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் விலகி மன நிம்மதி உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிசுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
நீங்கள் குடும்பத்தில் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருளாதார நிலை பாதிப்படையாது.
சிம்மம் :
உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.
கன்னி :
வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சுபமுயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபட சிறிது கண்டிப்பாக இருப்பீர்கள்.
துலாம் :
பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய பணி அமைய வாய்ப்புகள் அதிகம்.
விருச்சிகம் :
வீட்டிற்கு உறவினர்கள் வருகையால் வீண் செலவுகள் ஏற்படலாம். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினை குறையும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். தொழிலில் முன்னேற்றத்திற்காக எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
தனுசு :
குடும்பத்தினரிடம் தேவையில்லாத வீண் பிரச்சனைகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்
மகரம் :
குடும்பத்தில் காணப்பட்ட பிரச்சனைகள் விலகி ஒற்றுமை கூடும். உங்களுக்கு பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும்.
கும்பம் :
இன்று உங்களுக்கு பணவரவு சற்று சுமாராக இருக்கும். உடன் பிறப்புகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் லாபம் அடைய முடியும்.
மீனம் :
நீங்கள் எடுக்கும் காரியங்களை மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளால் நல்ல வாய்ப்புகள் கிட்டும்.