மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..
இன்று திங்கள் கிழமை தேதி 15.02.2021, நல்ல நேரம் :காலை 6.30-7.30, மாலை 4.30-5.30, ராகுகாலம் காலை 7.30-9.00, எமகண்டம் காலை 10.30-12.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம் :
தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்படும் என்பதால் எதிர்பார்த்த பணவரவுகளில் சிறு இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும். பெரியவர்களின் ஆதரவால் அனுகூலங்கள் உண்டாகும்.
ரிஷபம் :
குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். கடன் பிரச்சினைகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.
மிதுனம் :
ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் லாபம் கிட்டும். நண்பர்கள் தொழில் ரீதியான விஷயங்களில் உதவியாக இருப்பார்கள்.
கடகம் :
சுபமுயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை தரும்.
சிம்மம் :
. இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும் மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது நன்மை அளிக்கும்.
கன்னி :
குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் பிறரிடம் கொடுத்த கடன்கள் வசூலாகும்.
துலாம் :
பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படும்.
விருச்சிகம் :
பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலம் உண்டாகும். வேலையில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். நீண்ட காலமாக சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி நற்பலனை அளிக்கும்.
தனுசு :
தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் ஏற்படும். பணபற்றாக்குறை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும். அனுபவமுள்ள பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் பல புதிய மாற்றங்கள் உண்டாகும்.
Read more – மூதாட்டிகளுக்கு இலவசமாக தங்கம் – 15 பேரை ஏமாற்றிய நபர் கைது
மகரம் :
பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்ல நேரிடும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.
கும்பம் :
பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிட்டும். குடும்ப உறுப்பினர்களின் உதவியால் சுபகாரியங்கள் நடக்கும்.
மீனம் :
குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள். வியாபாரத்தில் உங்கள் புகழ் மேலோங்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும்.