மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..
இன்று வியாழன் கிழமை தேதி 11.03.2021, நல்ல நேரம் :காலை 10.30-11.30, மாலை 12.30- 1.30, ராகுகாலம் காலை 1.30-3.00, எமகண்டம் காலை 6.00-7.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம் :
உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உயர்பதவி கிடைக்க வாய்ப்பு அதிகம். தொழிலில் இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். பிள்ளைகளினால் இல்லத்தில் மனமகிழ்ச்சி உண்டாகும்.
ரிஷபம் :
குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ப வாய்ப்புகள் அமையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாக இருக்கும்.
மிதுனம் :
உங்களுக்கு மனதில் குழப்பம், தேவையற்ற கவலை உண்டாகும். உங்கள் ராசிக்கு காலை 09.21 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். வீண் பிரச்சினைகள் தேடி வரும் முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
கடகம் :
உங்கள் ராசிக்கு காலை 09.21 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. சுபகாரியங்களை சற்று தவிர்ப்பது நல்லது.
சிம்மம் :
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உத்தியோகத்தில் அலைச்சலுக்குப் பின் அனுகூலம் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும்.
கன்னி :
குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகி லாபகரமான பலன்களை அடைவீர்கள்.
துலாம் :
கணவன் மனைவி இடையே அன்பு அதிகாரிக்கும். சிக்கனமாக செயல்பட்டால் குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும்.
விருச்சிகம் :
குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைப்பதில் சில தடைகள் ஏற்படலாம். எதையும் யோசித்து செய்வது நல்லது. எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் நிலை ஏற்படும்.
தனுசு :
நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.
மகரம் :
உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்களால் செலவுகள் அதிகமாகும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
கும்பம் :
உங்களுக்கு பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகள் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்து விஷயமாக அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். தொழிலில் காணப்பட்ட போட்டி பொறாமைகள் குறையும்.
மீனம் :
உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சகோதர, சகோதரிகளுடன் சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை ஏற்படும்.