மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..
இன்று செவ்வாய் கிழமை தேதி 09.03.2021, நல்ல நேரம் :காலை 10.30-11.30, மாலை 4.30- 5.30, ராகுகாலம் காலை 3.00-4.30, எமகண்டம் காலை 9.00-10.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம் :
குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும் நாளாக அமையும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமான நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியை தரும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.
ரிஷபம் :
குடும்பத்தில் மன அமைதி குறைவதற்கான சூழ்நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதநிலை ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள்.
மிதுனம் :
குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உங்கள் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறையும்.பயணத்தின் போது கவனமுடன் இருப்பது நல்லது.
கடகம் :
குடும்பத்தில் உடன்பிறந்தவர்களுடன் இருந்த ஒற்றுமை கூடும். உத்தியோகஸ்தர்கள் புது உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை உருவாகும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.
சிம்மம் :
நீங்கள் கடினமான காரியத்தை கூட திறமையுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சினைகள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
கன்னி :
குடும்பத்தினருடன் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் நண்பர்களால் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன் கிட்டும்.
துலாம் :
உங்கள் உடல் நிலையில் சற்று மந்த நிலை மற்றும் சோர்வாக காணப்படுவீர்கள். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும்.
விருச்சிகம் :
உங்களுக்கு தொழிலின் முன்னேற்றத்தால் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.
தனுசு :
குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உற்றார் உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம்.
மகரம் :
நீங்கள் செய்யும் செயலில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
கும்பம் :
குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். உற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை அடையலாம். எதிலும் பொறுமையுடன் செயல்படுவதால் வெற்றி கிடைக்கும்.
மீனம் :
குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்பட்டு மகிழ்ச்சி நிலவும். நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியில் முடியும். சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும்.