மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..
இன்று புதன் கிழமை தேதி 07.04.2021, நல்ல நேரம் :காலை 9.00-10.00, மாலை 4.30- 5.30, ராகுகாலம் காலை 12.00-1.30, எமகண்டம் காலை 7.30-9.00 இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம் :
மன மகிழ்ச்சியாக இருப்பதால் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். குடும்பத்தினர் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.
ரிஷபம் :
வாழ்க்கையில் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்தொல்லையில் இருந்து விடுபடலாம். நண்பர்களுடன் பயணம் மேற்கொள்வது மகிழ்ச்சியளிக்கும். பணியில் பிறரை முழுவதுமாய் நம்பி ஏமாறாதீர்கள்.
மிதுனம் :
குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். இன்று உங்களுக்கு மதியம் 03.00 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வாழ்க்கை சிக்கலாக தோன்றலாம். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.
கடகம் :
பிறரிடம் பேசும்போது கவனமுடன் வார்த்தைகளை வெளிப்படுவது நல்லது. மதியம் 03.00 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
சிம்மம் :
உங்களுக்கு காலையிலே ஆச்சரியம் தரும் விஷயங்கள் காதில் கேட்கும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.
கன்னி :
குடும்பத்தில் பிள்ளைகளுடன் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நண்பர்களின் சந்திப்பு ஆறுதலை தரும்.
துலாம்:
உங்களுக்கு கவனச்சிதறல் உண்டாகலாம் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்திற்கு நேரத்தை செலவிடுவதன் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். திருமண முயற்சிகளை தொடங்க அனுகூலமான நாளாகும். எதையும் யோசித்து செயல்படுவது நல்லது.
விருச்சிகம்:
நீங்கள் நிகழ்த்தும் காரியங்களில் உறவினர்கள் உறுதுணையாய் நிற்பார்கள். பிடித்த விஷயத்திற்காக பணத்தை அதிகமாக செலவு செய்து கடன்களை எதிர்கொள்வீர்கள் . இன்றைய நாளில் முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்கலாம்.
தனுசு:
உங்களின் விடாமுயற்சிகு உரிய பலன்களை பெறுவீர்கள். வெளி இடங்களில் அமைதியாக இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உங்கள் குடும்ப முன்னேற்றம் குறித்து உங்கள் மனைவியிடம் விவாதிப்பீர்கள்.
மகரம் :
வேலை காரணமாக வெளியூர் சென்றாலும் அந்த பணியினை தீர்க்கமாக செய்து முடிப்பீர்கள். வேலை பளு காரணமாக குழப்பத்தில் ஆழ்ந்து இருப்பீர்கள். உங்களின் கோபத்தால் சிலரின் மனம் காயப்படும் நிலைமை ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கும்பம்:
உங்கள் கடின உழைப்பிற்கான பலன் பெறுவீர்கள். வீட்டில் பிரச்சினைகள் அதிகமாக காணப்படுவதால் சிறிது கவலை அளிக்கும். வெளியூர் பயணங்களை முடிந்தவரை தவிர்த்தல் நல்லது. ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது.
மீனம்:
பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமுடன் செயல்படுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் நேரம் செலவிட்டு அன்பை பரிமாறி கொள்ளுங்கள். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.