பிட் காயினை அங்கீகரித்த முதல் நாடு

மத்திய அமெரிக்காவில் உள்ள எல் சால்வடோர் என்னும் நாடு பிட்காயினை தங்கள் தேசிய அளவிலான நிதி பரிமாற்றத்துக்கு அங்கீகாரம் செய்துள்ளது.

பிட்காயினின் நிலையற்ற தன்மையாலும், பாதுகாப்பற்ற தன்மையாலும் பல நாடுகள் அதை பரிமாற்ற நாணயமாக அங்கீகரிக்கவில்லை.

இந்நிலையில், மத்திய அமெரிக்காவில் உள்ள, 69 லட்சம் மக்கள் தொகை கொண்ட எல் சால்வடோர் நாடு, பிட்காயினை அதிகாரப்பூர்வ பணபரிமாற்றத்திற்கு அங்கீகரித்துள்ளது. அந்த நாட்டில் அமெரிக்க டாலர் பணப் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது பிட்காயினும் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

முதலில் எல் சால்வடோரிலும் பிட்காயினை அங்கீகரித்து பணப் பரிமாற்றத்துக்கு ஏற்றபடி நடைமுறைக்குக் கொண்டு வருவதில் பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் நிலவி வந்தன. தற்போது அனைத்து சிக்கல்களும் சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், அதனாலேயே பிட்காயின் பரிமாற்றம் நாட்டில் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Exit mobile version