அமெரிக்காவில் மார்டனா தடுப்பூசி திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் :
உலகம் முழுவதும் கொரோனா பரவல் தொற்று காரணமாக மனிதர்களிடையை பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தியது.இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி கண்டுபிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.மேலும்,அமெரிக்கா,ரஷ்யா மற்றும் இங்கிலாந்து போன்ற வளர்ச்சி பெற்ற
நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டும்,செயல்படுத்தப்பட்டும் வருகிறது.
அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றாலும் கூட,அங்கு கொரோனா தாக்குதலின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது.அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்து வருகிறது.
இந்தநிலையில், மார்டனா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி அவசர கால பயன்பாட்டிற்காக அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.இதுகுறித்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில்,அமெரிக்காவில் மார்டனா தடுப்பூசி கிடைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
Read more – சட்டப்படிப்புகளுக்கான அரியர் தேர்வுகள் ஜனவரி 6 ம் தேதி நடத்தப்படும் : அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் தகவல்
ஏற்கனவே,அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி செயல்பாட்டில் உள்ள நிலையில்,அடுத்து மார்டனா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி செயல்பட இருக்கிறது.மேலும்,மார்டனா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கும் முதல் நாடு அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.




