2020-ஆம் ஆண்டுக்கான உலக பணக்கார பெண்கள் பட்டியலில், ‘அமேசான்’ நிறுவன சி.இ.ஓ.-வின் முன்னாள் மனைவி, மெக்கென்சி ஸ்காட் முதலிடம் பிடித்துள்ளார்.
2020-ஆம் ஆண்டுக்கான உலக பணக்கார பெண்கள் பட்டியலை, ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் 50 வயதாகும், ‘அமேசான்’ நிறுவன சி.இ.ஓ. ஜெப் பெசோசின் முன்னாள் மனைவி, மெக்கென்சி ஸ்காட் முதலிடம் பிடித்துள்ளார். ஜெப் பெசோஸ்-ம் உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார்.
இவருடைய மொத்த சொத்து மதிப்பு 6,800 கோடி டாலராகும். இவர்கள் இருவருக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு விவாகரத்து ஆனது. விவாகரத்து பெற்றபோது, ஜெப் பெசோசிடம் இருந்த ‘அமேசான்’ நிறுவன பங்குகளில் 4 சதவீத பங்குகள் மெக்கென்சி ஸ்காட்-ற்கு கிடைத்துள்ளது. இந்நிலையில், மெக்கென்சி ஸ்காட் பணக்கார பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் ஒட்டுமொத்த பணக்காரர்கள் பட்டியலிலும் 12-ஆம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஒரு நூலாசிரியர் மற்றும் இரக்கமுள்ள நன்கொடையாளர் என அனைவராலும் போற்றப்படுபவர் ஆவார். இவர் பல பில்லியன் டாலர் மதிப்பிலான பணத்தை, பல நல்ல விஷயங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.