குழப்ப தான் செய்வோம் – அதிபர் ஜோபிடன் அறிவிப்பு

ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கையை குழப்பம் இல்லாமல் கையாள முடியாது என்று அமெரிக்க அதிபர் ஜோபிடன் தெரிவித்துள்ளார்.கடந்த மே மாத தொடக்கத்தில் இருந்து அமெரிக்கா மற்றும் நாட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற தொடங்கினர். இதனை சாதமாக்கி கொண்டு தாலிபான்கள் அதிரடி தாக்குதல் நடவடிக்கைகள் மூலமாக ஆப்கனை தங்கள் வசமாக்கி விட்டனர்.தாலிபான்கள் ஆட்சியில் வன்முறைகள் அதிகரித்து வந்த அச்சத்தால் ஆப்கனில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வரும் நிலையில், அமெரிக்க படைகளை அமெரிக்கா திரும்பப் பெறும் நடவடிக்கை பற்றி சர்வதேச அளவில் விமர்சனம் எழுந்தது.

குறிப்பாக அமெரிக்க அதிபர் ஜோபிடன் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.ஆப்கானிஸ்தானில் தற்போது ஏற்பட்டு இருக்கும் நிலைமைக்கு ஜோபிடன் தான் காரணம் என்று முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.இதனிடையே வாஷிங்டனில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோபிடன்,.ஆப்கனில் இருந்து அமெரிக்கர்கள் அனைவரும் அழைத்து வரப்படும் வரை அமெரிக்க ராணுவம் அங்கு தங்கி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் தேவைப்பட்டால் ஆகஸ்ட் 31ம் தேதிக்குப் பிறகும் ஆப்கனில் அமெரிக்க படைகள் இருக்கும் என்று ஜோபிடன் கூறியுள்ளார். மேலும் பேசிய ஜோபிடன், ‘ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஆப்கானில் 15,000 அமெரிக்கர்கள் உள்ளனர்.அமெரிக்கர்கள் மற்றும் நட்பு நாட்டு மக்கள் அனைவரையும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அமெரிக்கா அழைத்து வர திட்டமிட்டுள்ளோம். ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெற முடிவு செய்ததில் தவறு ஏதும் இல்லை.அமெரிக்க படைகளை எப்போது திரும்பப் பெற்றாலும் ஆப்கனில் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது, ‘ என்றார்.

Exit mobile version