அடுத்த வருடம் அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோ பைடன் தொலைக்காட்சி நேரலையில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தி கொண்டார்.

வாஷிங்டன் :
அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றாலும் கூட,அங்கு கொரோனா தாக்குதலின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது.அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில்,அமெரிக்கா தற்போது கொரோனா தொற்று மற்றும் அதனால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து அமெரிக்காவில் இந்த கொரோனா தாக்கத்தால் மக்களிடையே அச்சம் பரவி வருகிறது.
Read more – இன்றைய ராசிபலன் 22.12.2020!!!
கொரோனாவின் தீவிர தொற்று பரவலை கட்டுப்படுத்த பைசர் நிறுவனம் தடுப்பூசி ஒன்றை கண்டறிந்து பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.அமெரிக்கர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அடுத்த வருடம் அமெரிக்காவில் அதிபராக பதவி ஏற்கும் ஜோ பைடன் தொலைக்காட்சி நேரலை மூலமாக பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தி கொண்டார்.அதன் பிறகு பேசிய அவர், மருந்து கிடைக்கும்பொழுது அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள். தடுப்பூசியை கண்டுபிடித்தவர்களுக்கு எனது பாராட்டுக்கள் என்று தெரிவித்தார். மேலும் அவர் இனி கொரோனா தொற்று குறித்து இனி அமெரிக்காவில் யாரும் கவலைப்பட தேவை இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.




