கூகுள் பிளே ஸ்டோரில் 10 மில்லியன் பேர் முன்பதிவு : மீண்டும் பப்ஜி கேம் அறிமுகம்…!!

மீண்டும் பப்ஜி கேம் அறிமுகப்படுத்தப்படுவதால் கூகுள் பிளே ஸ்டோரில் 10 மில்லியன் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் புதிய வடிவமைப்பில் பப்ஜி விளையாட்டை அறிமுகம் செய்ய உள்ளதாக பப்ஜி நிறுவனம் டிவிட்டரில் அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து கூகுள் பிளே ஸ்டோரில் முன்பதிவு தொடங்கியது. 2 மாதங்களில் மட்டும் இதுவரை சுமார் 10 மில்லியன் பேர் பப்ஜி நியூ ஸ்டேட் வீடியோ கேமுக்கு முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். வீடியோ கேம் ஒன்றுக்கு முன்பதிவு செய்து காத்திருக்கும் நபரின் எண்ணிக்கையில் பப்ஜி கேம் புதிய சாதனையை படைத்திருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

சீனா எல்லையில் அத்துமீறியதைத் தொடர்ந்து பப்ஜி உள்ளிட்ட சீன நிறுவனங்கள் தொடர்பான செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது. மேலும், பப்ஜி, டிக்டாக் உள்ளிட்ட செயலிகள் மூலம் தனிநபர் தகவல்களும் திருடப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

திட்டவட்டமாக மறுத்த பப்ஜி நிறுவனம் பப்ஜி வீடியோ கேமின் இந்தியாவுக்கான அறிவுசார் சொத்துரிமையை வைத்துள்ள கிராப்டன் நிறுவனம், வீடியோ கேம், எஸ் ஸ்போர்ட்ஸ், பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான துறைகளில் மட்டும் 725 கோடி ரூபாயை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. மேலும், கிராப்டன் நிறுவனம் சீனாவைச் சேர்ந்தது என்பதால், இந்தியாவில் அனுமதி கிடைப்பதில் தொடர்ந்து

Exit mobile version