நாம் இன்று சார்ந்து இருக்க கூடிய நவீன உலகத்தில நம்முடைய தகவல்கள் எல்லாமே ஏதோ ஒரு வகையில்ஆன்லைன் Data-வாக சேமித்து வைக்கப்பட்டு வருகிறதூ. அது நம்முடைய செல்போனோ அல்லது அரசின் டெட்டா பேஸோ எதோ ஒரு இடத்தில இருக்கிறது. அந்த தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்க நாம் பல்வேறு முயற்சிகளை செய்கிறோம், அதைவிட பல மடங்கு முயற்சிகளை செய்து பாதுகாக்கிறது நம்முடைய அரசாங்கம். எவ்வளவு தான் பாதுகாப்பாக வைத்து இருந்தாலும் அதில் எதாவது ஒரு Loophole கண்டுபிடிச்சு அந்த தகவல்களை எல்லாம் திருடுவதற்கான முயற்சிகள் நடந்துக்கிட்டு தான் இருக்கு. அப்படி திருட முயற்சிப்பவர்களை தான் Hackers என்று அழைக்கிறோம்.
இப்படி நடக்குறதை தடுப்பவர்கள் தான் Ethical Hackers எனப்படுகிறார்கள். இந்த இரண்டு பேருக்கும் உள்ள வித்தியாசத்தை பற்றித்தான் பார்க்கபோறோம். இதற்கு எல்லாம் முன்னதாக ஹேக்கிங் என்றால் என்ன என்பது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம். ஒருபெரிய நிறுவனத்திற்கு தெரியாம அவங்களோட தகவல்களை எல்லாம் ஆன்லைன் வழியாக திருடி, அதை வைத்து பணம் கேட்டு மிரட்டுபவர்கள் தான் ஹேக்கர்ஸ். உதாரணத்திற்கு ஆதார் தகவல்கள் திருடப்பட்டதா? அடிக்கடி வெளியாகுற தகவல்களை சொல்லலாம்.
ஹேக்கர்ஸில் பல வகை உண்டு, Black Hat,White Hat,Grey Hat என 3 வகையான ஹேக்கர்கள் இருக்கிறார்கள்.
Black Hat Hackers:
முதலில் Black Hat Hackers அப்படின்னா யாருன்னு தெரிஞ்சுப்போம். இவங்கதான் பெரிய பெரிய கம்பெனிகளோட தகவல்கள் எல்லாம் எடுத்து ஆன்லைன் அதாவது Dark Webல Upload பண்ணிருவாங்க அல்லது அந்த தகவல்களையெல்லாம் வெளியிடாமல் இருக்க, குறிப்பிட்ட நிறுவனத்தை மிரட்டி பணம் பறிப்பாங்க.
White Hat Hackers
இவங்கள The Good Guyz அப்டினு சொல்வாங்க, இவங்க பெரிய பெரிய நிறுவனங்களோடு இணையத்தளங்கள் அப்பறம் Application எல்லாம் Testபண்ணுவாங்க அதில் எதாவது Loophole இருந்த அந்த தகவல்களை Black Hat மாறி இல்லாம இவங்க அந்த நிறுவனத்திடம் சொல்லுவாங்க. அந்த நிறுவனம் இவங்களுக்கு சில Rewards கொடுப்பாங்க அல்லது அவங்க நிறுவனத்தில் வேலைக்கூட சேர்த்துக்கொள்ளுவாங்க. இதுகாக்காக ஆப்பிள்,Google, Facebook போன்ற நிறுவனங்கள் Bug Bounty Programsன்னு ஒண்ண நடத்திட்டு வர்றாங்க. இதன் மூலம் அவங்க நிறுவனத்தோடு சர்வரில் ஏதாவது vulnerablity இருந்த அதை தெரிஞ்சு Fix பண்ணிருவாங்க.இதை பண்றவங்க எல்லாருமே Ethical Hackers.
Grey Hat Hackers
இவங்களும் மேல சொன்ன இரண்டு பேருக்கும் நடுவுல உள்ளவங்க இவங்களும் ஒரு நிறுவனத்தோட தகவல்களை அவங்களோட எந்த ஒரு அனுமதியும் பெறாமல் எடுத்து தவறான வழியில் பயன்படுத்தாம அந்த நிறுவனத்திடமே ரிப்போர்ட் செய்வாங்க. இவங்களும் ஒரு விதத்தில Black Hat ஹேக்கர் போலத்தான்.
இந்த மூன்று வகையிலும் சொன்னதுல White Hat Hackerலேயே Ethical Hacking அடங்கிரும், இன்னும் தெளிவா சொல்லணும் அப்டினா பெரிய நிறுவனங்களோடு தகவல்களை பாதுகாப்பது தான் இவங்களோட வேலை, அதுமட்டுமில்லாமல் இவங்களோட சம்பளமும் அதிகம்.
அதே போல நீங்க ஒரு Ethical Hacker ஆகணும் என விரும்பினால் உங்களக்கு நல்ல Computer Knowledge இருக்க வேண்டும். அத்துடன் சிஸ்டம் கோடிங் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். அதன் பின்னர் ஒரு சிஸ்டத்தில் உள்ள தகவல்களை திருட எப்படியெல்லாம் முயற்சிப்பாங்க, ஹேக்கர்ஸை தடுக்க என்ன மாதிரியான வழிகளை எல்லாம் கையாள வேண்டும் போன்ற விஷயங்களை தெரிந்து வைத்திருப்பது அவசியமானது.