சோனி நிறுவனத்தின் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட பிஎஸ்5 விற்பனை முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே விற்று தீர்ந்தது.

சோனி நிறுவனத்தின் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட பிஎஸ்5 விற்பனை முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே விற்று தீர்ந்தது.
இதன் முன்பதிவு சோனி செண்டர், ரிலையன்ஸ் டிஜிட்டல், தி ஷாப், அமேசான் இந்தியா, ப்ளிப்கார்ட் உள்ளிட்ட மையங்களில் நடைபெறுகிறது. 12 மணிக்கு முன்பதிவு துவங்கிய நிலையில், 12.10க்கே அனைத்து யூனிட்டுகளும் விற்று தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், பிஎஸ்5க்கு அதிக தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. பிஎஸ்5 மட்டுமில்லாமல், டூயல் சென்ஸ் கண்ட்ரோலர், மீடியா ரிமோட் இவைகளையும் முன்பதிவு செய்ய முடியும். இவற்றின் விலை ரூ. 5,990 மற்றும் ரூ. 2,590 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
READ MORE- வாட்ஸப்பால் ட்ரெண்ட் ஆகும் டெலிகிராம்!
இதன் முன்பதிவு தொடங்கிய அதேசமயம், பல்ஸ் 3டி வயர்லெஸ் செட், பிஎஸ் ஹெச்டி கேமரா மற்றும் டூயல் சென்ஸ் சார்ஜிங் சென்ஸ் கேமரா போன்றவைகளின் முன்பதிவு இன்னும் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




