லாவா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

லாவா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதன்படி, அடுத்த வருடம் ஜனவரி 7ம் தேதி அறிமுகப்படுத்த இருப்பதாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
READ MORE- இந்தியா வரும் ரியல்மி கியூ2!
இந்திய ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் அதிரடியான திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் லாவா நிறுவனம் மேட் இன் இந்தியா ஸ்மார்ட்ஃபோன்களை அறிமுகப்படுத்த இருக்கிறது. லாவா நிறுவனம் நான்கு புதிய ஸ்மார்ட்ஃபோன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது என தகவல் வெளியான நிலையில், அது குறித்தான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

அறிமுகமாகும் ஸ்மார்ட்ஃபோன்களின் விலை ரூ. 5000லிருந்து ரூ. 20,000 வரை இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து லாவா நிறுவனம் இந்திய சந்தையில் ‘மேட் இன் இந்தியா’ பிராண்டிங்கில் ஸ்மார்ட்ஃபோன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.




