Jio அறிவித்துள்ள அதிரடி ஆபர் : 30 நாட்கள் FREE வேலிடிட்டி…!!

Jio அறிவித்துள்ள 30 நாட்கள் FREE வேலிடிட்டி அதிரடி ஆபர் அறிவித்துள்ளனர்.

ஜியோ ஃபைபர் ஓராண்டு கால மற்றும் ஆறு மாத கால அன்லிமிடெட் இன்டர்நெட் திட்டங்கள் இப்போது கூடுதல் செல்லுபடியாகு காலத்தை வழங்குகிறது. தற்போது ரிலையன்ஸ் ஜியோ ஜியோ ஃபைபர் சேவையின் ஓராண்டு தொகுப்புகளின் கீழ் 30 நாட்கள் கூடுதல் செல்லுபடியாகும் காலமும், அதன் ஆறு மாத கால திட்டங்களில் 15 நாட்கள் கூடுதல் வேலிடிட்டியும் அணுக கிடைக்கும். ஜியோ ஃபைபருக்கான 1 ஆண்டு தொகுப்பு ரூ.4,788 (பிளஸ் ஜிஎஸ்டி) முதல் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. அதாவது ரூ.399 என்கிற ஒரு மாத கால அடிப்படை திட்டம் 365 நாட்களுக்கு கிடைக்கும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகையின் ஒரு பகுதியாக, 12 மாதங்களுக்கு ஒரே நேரத்தில் பணம் செலுத்தும் பயனர்களுக்கு கூடுதலாக 1 மாத செல்லுபடியை வழங்குகிறது.

அதாவது மேற்ற்குறிப்பிட்ட அதே தொகைக்கு மொத்தம் 395 நாட்கள் என்கிற வேலிடிட்டி கிடைக்கும். இதேபோல் JioFiber சேவையின் ஆறு மாத கால திட்டங்களை வாங்கும் பயனர்களுக்கு 15 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி கிடைக்கும். இந்த புதிய சலுகை, ஜியோ ஃபைபர் பயனர்களுக்கான அனைத்து ஆண்டு மற்றும் ஆறு மாத திட்டங்களுக்கும் பொருந்தும். இந்த கூடுதல் வேலிடிட்டி சலுகையானது, ஜியோ ஃபைபர் ரூ.399, ரூ.699, ரூ.999, ரூ.1,499, ரூ.2,499, ரூ.3,999, மற்றும் ரூ.8,499 போன்ற மாதாந்திர திட்டங்களில் அணுக கிடைக்கும்.

இந்த திட்டங்களில் 12 மாதங்களுக்கு ஒன்றாக வாங்கினால் கூடுதலாக 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இதேபோல் பயனர்கள், ஜியோ ஃபைபரின் அரை ஆண்டு பேக்களை வாங்கினால், அதாவது ஆறு மாத செல்லுபடியாகும் திட்டங்களுக்கு, கூடுதலாக 15 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். பிரீமியம் திட்டமான ரூ.8,499 வழியாக 1 ஜி.பி.பி.எஸ் பதிவேற்றம் / பதிவிறக்க வேகத்தின் கீழ் 6,600 ஜிபி வரை டேட்டா, நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி, சோனி எல்ஐவி, ஜீ 5, வூட் செலக்ட் மற்றும் பல ஆப்களுக்கு இலவச சந்தாவை ஆகியவற்றை வழங்குகிறது. குறிப்பிடும் வண்ணம், இந்த ஜியோ பைபர் எக்ஸ்ட்ரா வேலிடிட்டி சலுகையை முதலில் கண்டறிந்து அறிக்கை வெளியிட்டது டெலிகாம் டால்க் வலைத்தளம் ஆகும்.

Exit mobile version