ஃபேஸ்புக்கில் நாம் பகிரும் விஷயங்களை நீக்கும் ‘டெலிட்’ ஆப்ஷனை நீக்கியுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.

ஃபேஸ்புக்கில் நாம் பகிரும் பதிவுகளை தேவையில்லை என்றாலோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ நாம் நீக்கி கொள்ள இதுவரை ‘டெலிட்’ ஆப்ஷன் இருந்தது.
ஆனால், தற்போது அதை நீக்கி அதற்கு பதிலாக புதிய அப்டேட்டை கொடுத்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். டெலிட் ஆப்ஷனுக்கு பதிலாக மூவ் டூ ட்ராஷ் (Move to Trash) என்ற ஆப்ஷனை கொண்டு வந்துள்ளது ஃபேஸ்புக். ட்ராஷ்ஷில் சேரும் பதிவுகள் முப்பது நாட்களுக்கு பிறகு தானாகவே டெலிட் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு போஸ்ட்டை டெலிட் செய்ய வேண்டும் என்றால் மூவ் டூ ட்ராஷ் கொடுத்த பிறகு செட்டிங் ஆப்ஷனிற்கு சென்று ஆக்டிவிட்டி லாக்கில் சென்று குறிப்பிட்ட போஸ்ட்டை டெலிட் செய்யலாம்.
READ MORE- குறைந்த விலையில் டைவாவின் ஸ்மார்ட் டிவி அறிமுகம்!
இது கடினமானதாக இருந்ததால் இப்படி நேரடியாகவே அப்டேட்டை கொடுத்துள்ளது ஃபேஸ்புக். மேலும் தவறுதலாக நாம் ஒரு போஸ்ட்டை டெலிட் செய்தால் கூட ட்ராஷ்ஷிலிருந்து மீண்டும் எடுத்து கொள்ளலாம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.




