தமிழகத்தில் இதுவரை 445 கோடியை பறிமுதல் செய்த தேர்தல் ஆணையம்..

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 445 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்களை கைப்பற்றியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை :

தமிழக சட்டமன்ற தேர்தலை அறிவித்ததில் இருந்து அனைத்து கட்சிகளும் மக்களை கவர அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் கிடுக்குப்பிடி பிடித்தது.

அதன் அடிப்படையில், தமிழகத்தில் இதுவரை 445 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 2016 தேர்தலின்போது 130 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Read more – கோவையில் வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த மய்ய தலைவர்…

ஆனால். இந்த ஆண்டு அதைவிட 340 சதவீதம் மதிப்பு கொண்ட பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தமிழக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version