வெளியானது இறுதி வேட்பாளர் பட்டியல்.. அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி எது ?

வருகின்ற ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

சென்னை :

வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12 ம் தொடங்கி 19 ம் தேதி நிறைவடைந்தது. 234 தொகுதிகளுக்கு 6,183 ஆண்கள், 1,069 பெண்கள், 3 திருநங்கைகள் என 7,255 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்த நிலையில் 2, 743 வேட்புமனுக்கள் பல்வேறு காரணங்களால் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. மேலும், 371 பேர் வேட்புமனுக்களை திரும்ப பெற்ற நிலையில் தமிழக இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் 4, 141 பேர் இடம்பெற்றுள்ளனர்.

Read more – முதல்வராவது அவ்வளவு ஈஸியா ? அந்த பதவி உங்களுக்கு இல்லையே ராசியா… ஸ்டாலினை வம்பிழுத்த எடப்பாடி

கரூர் தொகுதியில் அதிகபட்சமாக 77 வேட்பாளர்கள் மற்றும் காங்கேயத்தில் 50 வேட்பாளர்கள் மோதிக்கொள்கின்றனர். அதேபோல், குறைந்தபட்ச வேட்பாளர்களாக பவானிசாகர், வால்பாறை தொகுதிகளில் தலா 6 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

வேட்பாளர்களின் இறுதி பட்டியலை தொடர்ந்து அவர்களுக்கான சின்னம் மற்றும் பெயர்களை ஓட்டு பதிவு இயந்திரத்தில் பதிப்பதற்கான வேலையை தேர்தல் ஆணையம் செய்ய இருக்கிறது.

Exit mobile version