அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.திக விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

சென்னை :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக, அதிமுக போன்ற முக்கிய கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிமுகவுடான கூட்டணியில் கடந்த 2019 ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக கட்சி அமைத்து இருந்தது.
தற்போது, அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலையொட்டி தொகுதிப்பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க உடன் தே.மு.தி.க 3 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் தே.மு.தி.க சார்பில் 41 தொகுதிகளைக் கேட்டதாகவும், அ.தி.மு.க 13 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிமுக தொகுதியில் இருந்து தேமுதிக விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more – இன்றைய ராசிபலன் 10.03.2021!!!
அதிமுக சார்பில் ஏற்கனவே பாமக – 23, பாஜக – 20 தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்டநிலையில் தேமுதிகவிற்கு 13 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.





