மே 2 ம் தேதி காலை 8. 30 மணி முதல் தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கும் : சத்யபிரதா சாகு தகவல்

தமிழகத்தில் மே 2 ம் தேதி காலை 8. 30 மணி முதல் தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி வரும் மே 2 ம் தேதி 75 மையங்களில் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது : தமிழகத்தில் வழக்கமாக 8 மணிக்கே ஓட்டு எண்ணும் பணி தொடங்கும் நிலையில் காலை 8. 30 மணி முதல் தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கும் என்றும், மே 2ஆம் தேதி காலை 8 மணி வரை தபால் வாக்குகள் பெற இருப்பதால் இந்த நேரம் மாற்றப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

Read more – வாக்கு எண்ணும் மையத்திற்கு மேல் பறந்த ட்ரோன்.. தேர்தல் அதிகாரிகளுக்கு திமுக தொண்டர்கள் கொடுத்த கடைசி வார்ன்…

மேலும், அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் வாக்கு எந்திரங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், எந்திரங்கள் கால்குலேட்டர் போன்றது அதை யாராலும் ஹேக் செய்து தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version