என் மீது கடுகளவு ஊழலை நிரூபித்தாலும் வேட்பாளர் போட்டியில் இருந்து விலக தயார் என்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை :
தமிழகத்தில் இன்னும் சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் மாறி மாறி கடுமையாக விமர்சனம் செய்து வாக்குகளை சேகரிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் செல்லூர் ராஜு மீண்டும் வெற்றிபெற கடுமையாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஊருக்கும், உறவினருக்கும் மட்டும் தெரிந்த இந்த செல்லூர் ராஜுவை உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள் மேற்கு தொகுதி மக்கள்தான். இந்த தொகுதி மக்கள் நான் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது நல்ல வரவேற்பை எனக்கு தருகிறார்கள். நிச்சயம் இந்த தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று மக்களுக்கு தொடர்ந்து நல்லது செய்வேன் என்று தெரிவித்தார்.
Read more – தமிழகத்தை சுத்தம் செய்ய வந்த துப்புரவு தொழிலாளிகள் நாங்கள் – கமல்ஹாசன்
மேலும், பா.ஜக அதிமுக ஒற்றுமையுடன் இருப்பது சிலருக்கு சகிக்க முடியாதவில்லை அதனால் போலியான சில கடித்தை பரப்பி பிரிக்க பார்க்கிறார்கள். என் மீது தொடர்ந்து ஊழல் புகார் தெரிவித்து வருகின்றனர். எனது துறையில் நான் எந்த இடத்திலும் ஊழல் செய்ததில்லை. அப்படி யாராவது என் மீது கடுகளவு ஊழலை நிரூபித்தாலும் வேட்பாளர் போட்டியில் இருந்து விலக தயார் என்றார். தொடர்ந்து பேசிய அவர், காரில் செல்லும்போது மட்டுமே நான் அமைச்சர், மற்ற நேரத்தில் நானும் சராசரி மனிதனே என்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.




