சமரசம் இல்லாமல் சண்டையிடுவேன்… திருவொற்றியூரில் சீறிப்பாய்ந்த சீமான்..

திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உணர்ச்சிவசமாக பேசி பிரச்சாரம் செய்தார்.

சென்னை :

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ம் தேதி தேர்தல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.

இதையடுத்து நேற்று திருவொற்றியூர் தொகுதியில் சீமான் பிரச்சாரம் செய்தபோது கூறியதாவது, மக்கள் வாழும் இடத்தில் அனல் மின் நிலையத்தை உருவாக்கி சாம்பலை தூவி வாழ்வாதாரத்தை அழித்து சாம்பலாக்கிக்கொண்டிருக்கிறார்கள். 6 ஏக்கர் நிலத்தை அதானி கைக்குள் வைத்துக்கொண்டு குடிநீரை குடிக்கவிடாமல் ஒற்றை முதலாளிக்கு கொடுத்து உதவுகிறார்கள், அவர்களுக்கு எதிராக சமரசம் இல்லாமல் சண்டை செய்வேன் என்று தெரிவித்தார்.

Read more – வாக்குறுதி அளிக்கிறேன், எனக்கு வாக்களியுங்கள்… ஆண்டுதோறும் 6 எரிவாயு சிலிண்டர்கள்… முதல்வரின் திருவிளையாடல்

மேலும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கு அரசு வேலைகள் கொடுக்க முயற்சி மேற்கொள்வேன் என்றார். தொடர்ந்து இலவசங்களை அறிவித்து மக்களை சிந்திக்கவிடாமல் செய்யமாட்டேன் அது அவர்களின் வாழ்வை சீராக்கும் என்றும், தண்ணீர் விற்பனைக்கு தடை செய்வம் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version