நத்தம் விஸ்வநாதனை குத்திய புதிய வழக்கு.. ஆரத்திக்கு நோட்… போடுவாங்களா கேட்..

தேர்தல் விதிமுறைகளை மீறி ஆரத்தி எடுத்த பெண்களுக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பணம் கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திண்டுக்கல் :

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக தேர்தல் ஆணையமும் சமீபத்தில் கணக்கில் வராத 113 கோடி பணம் மற்றும் தங்கத்தை கைப்பற்றியது. மேலும், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

இந்தநிலையில், அதிமுக சார்பில் மீண்டும் நத்தம் தொகுதியில் போட்டியிடும் நத்தம் விஸ்ஸ்வநாதன் காட்டு வேலம்பட்டி என்ற ஊரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் வழங்கியுள்ளார். தற்போது அந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Read more – சாதியை பார்க்காதீங்க… சாதிப்பவனை பாருங்க, ஓட்டு போடுங்க…. கோவையில் களமிறங்கிய கமல்

இதுகுறித்து தேர்தல் பிரிவு வீடியோ கண்காணிப்பு குழு தலைவர் மைக்கில் ஆரோக்கியதாஸ் அளித்த புகாரின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் அதிமுக தொண்டர்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் நத்தம் விஸ்வநாதன் நத்தம் தொகுதியில் போட்டியிடுவது பாதிக்கப்படுமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Exit mobile version