பாஜக வாஷ்அவுட், அதிமுக வால்க் அவுட்.. இதுதான் அவர்களுக்கு வரப்போகும் நிலைமை… பிரச்சாரத்தில் முக ஸ்டாலின்

வரும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்து வால்க் அவுட்டாகி விடும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேலூர் :

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏப்ரல் 6 ம் தேதி வாக்குப்பதிவு என்பதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்தநிலையில், வேலூர் மாவட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதாரவாக திமுக தலைவர் முக ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர், தமிழகத்தில் மக்களவைத் தேர்தலைப் போல சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க. வாஷ் அவுட் ஆகிவிடும். அ.தி.மு.க.வில் ஒருவர் வெற்றி பெற்றாலும், அவர் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வாகவே கருதப்படுவார் என்று தெரிவித்தார்.

Read more – வாக்காளர் சீட்டு விநியோகம் தமிழகம் முழுவதும் தொடங்கியது…

மேலும், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணிதான் வெற்றிபெற்றதும், அ.தி.மு.க.வினருக்கு இதுதான் கடைசி சட்டமன்றமாக அமையும் இனிமேல் அவர்கள் உள்ளே வர முடியாது என்றும், அதிமுக எம்.பி. அல்ல, அவர் பா.ஜ.க. எம்.பி.யாக செயல்படுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version