8 தொகுதி ஜெயிச்சா போதும்.. மதிமுக இந்த உலகை ஆளும்… வைகோ அதிரடி பேட்டி

8 தொகுதியில் வெற்றி பெற்றாலே அங்கீகாரம் கிடைத்துவிடும் என்று திமுக கூட்டணியில் உள்ள மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சென்னை :

தமிழகத்தில் அடுத்த மாதம் 6 ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மற்றும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைக்கு அதிமுக – பாமக கட்சிகளின் கூட்டணி மட்டுமே உறுதியாகி உள்ளது. பிற கட்சிகளின் பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியில் மட்டுமே இருக்கிறது.

இந்தநிலையில், திமுக அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்கு ஆயுத்த நிலையில் உள்ளதால் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த அளவே தொகுதிகளை ஒதுக்கி உள்ளது. இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்து கூறியதாவது;

Read more – இன்றைய ராசிபலன் 03.03.2021!!!

திறம்பட கூறியுள்ளார். 12 தொகுதியில் போட்டியிட்டால் தான் அங்கீகாரம் கிடைக்கும் என்பது இல்லை. 8 தொகுதியில் வென்றாலே போதும் அனைத்தும் அமைந்துவிடும் என்றும், மதிமுக தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version