தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறாது… வழக்கம் போல் வாய்விட்ட சுப்பிரமணிய சுவாமி…

தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறாது என்று பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

திருப்பதி :

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று அதிமுக சார்பில் 177 பேர் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம் விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி தனி தொகுதி, கோவை தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், நெல்லை, தளி, காரைக்குடி, தாராபுரம் தனித்தொகுதி, மதுரை வடக்கு ஆகிய தொகுதிகள் வழங்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழக பா.ஜ. க தலைவர் எல். முருகன் அதிமுகவிற்கு நன்றியும் தெரிவித்திருந்தார்.

Read more – தேமுதிகவுடனான கூட்டணி பேச்சு… இதோட நின்னு போச்சு.. பொங்கி எழுந்த கமல்

இதுகுறித்து திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது; தமிழகத்தில் பாஜக 2, 3 தொகுதிகளில் வெற்றி பெறும் அல்லது ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் போகும் எனவும், தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட்டு இருக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்திருந்தார்.

Exit mobile version