தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை :
வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் உள்ள பா.ஜ.க தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ளார்.
பா.ஜ.க தேர்தல் அறிக்கை பின்வருமாறு :
*பூரணமதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்படும்.
*18 முதல் 23 வயது வரை உள்ள பெண்களுக்கு இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் இலவசமாக வழங்கப்படும்.
*8ம் வகுப்பு, 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவமாக டேப்லெட் வழங்கப்படும்
*சென்னை மாநகராட்சி மூன்றாக பிரிக்கப்படும்.
*தமிழகத்தில் சட்டமேலவை மீண்டும் கொண்டுவரப்படும்.
*வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தை பெயரில் ரூ.1 லட்சம் வைப்பு நிதி.
*12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும்.
*தமிழகம் முழுவதும் தேவையான அளவு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.
*விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
*விவசாயிகளை போல மீனவர்களுக்கும் வருடாந்திர உதவித்தொகை ரூ.6,000 வழங்கப்படும்.
*50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பா.ஜ.க. சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் மற்றும் காரைக்குடி வேட்பாளர் எச். ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.