அதிமுக கட்சியில் போட்டாங்க கேட் (டு)… சுயேட்சையாக களமிறங்குறார் ஓட்டு கேட்டு.. தோப்பு வெங்கடாசலம் தீடிர் முடிவு

அதிமுக கட்சியில் சீட் வழங்காததால் பெருந்துறை தொகுதியில் சுயேட்சையாக அதிமுக எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் களமிறங்க இருக்கிறார்.

பெருந்துறை :

அதிமுக சார்பில் பட்டியல் முதல்வர், துணை முதல்வர் உள்பட 6 பேர் உள்ளடக்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், கடந்த வாரம் 2 ம் கட்ட 171 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்தநிலையில், பெருந்துறை தொகுதி வேட்பாளராக தான் தேர்ந்தெடுக்கப்படுவோம் என எதிர்பார்க்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலதிற்கு பதிலாக பெருந்துறை தொகுதி வேட்பாளராக ஜெயகுமார் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக கட்சி அறிவித்தது.

Read more – 1000 ரூபாய் நோட்டை போல் செல்லா காசாக்குங்கள் எடப்பாடி பழனிசாமியை… உதயநிதி நிகழ்த்திய அதிரடி உரை..

இதையடுத்து, ஏமாற்றமடைந்த தோப்பு வெங்கடாசலம் பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்து அதற்கான வேட்புமனுவை இன்று அவர் தாக்கல் செய்ய இருக்கிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

Exit mobile version